
உன் பாதத்தின் ஒலி எப்போ...?
------------------------------------
ஒவ்வொரு இரவுப்பொழுதில்
என் விடியலைத்தேடி
செல்கின்றேன்
உன் காலடியில்
ஒரு குழந்தைபோல்
வந்து விளையாடி மகிழ.
ஆனால்
'சூரியன் தினம் தினம்
வெளிச்சத்தை கொடுத்தாலும்
எனக்கு இன்னமும்
விடியலைத்தரவில்லை.
வருவதும் போவதுமாய்
நிற்கின்றான்.
எனக்கு பகலுக்குள்ளும்
இரவை தந்துசெல்கின்றான்.
இருளக்குள் தத்தளிக்கும்
எனக்கு உன் முகம் காணும்
நாள் தான் வெளிச்சம்
கிடக்கும் நன்நாள்.
காத்திருப்பேன்
உன்பாதஒலியை
கேட்டிட.
விழத்திருப்பேன்.
என் ஆயுள்வரை
அன்புடன்
ராகினி.
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க.....
No comments:
Post a Comment