
என் இதயத்தில் நீயும்
உறவுக்கு விடை தேடாமல்
எனக்கு ஒன்று என்றால்
உன்னையறியாமல்...
நீ...தவித்து..
உனக்கு ஒன்று என்றால் நான்
தவித்து
அன்பை மட்டும் பகிர்ந்து
இறுதிவரை பிரியாதிருந்து
ஒருவரை ஒருவர் மறவாதிருந்து.
இருவரும் ஒன்றாக வாழ்வோமா...?
நீ..இருப்பதும் நான் இருப்பதும்
வெகு தூரமானாலும்..
உன்னை என் விழிகள்
பாராமல் போனாலும்.
உன் இதயத்தில் என் விழிகள்
மறையாதிருக்குமா....?
இல்லை..
அன்பே..வா..அருகிலே...
அதுவும் முடியா...தென்றால்
உன்னை நான் மறவேன்...
என்னை நீ..மறவாதிரு.
ராகினி
ஜேர்மன்

http://www.mediafire.com/?ziob09tc6fl
No comments:
Post a Comment